ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!

மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும் முறைசாரற்ற வழிகளில் வளர்ந்ததை நல்லாட்சி காலத்தில் அகற்றவில்லை இதன் காரணமாகவே ஊடகவியலாளர்கள் சிவில் சமூகத்தினர் உட்பட பலரை பயங்கரவாத விசாரணை பிரிவினரும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் தொடர்ந்தும் விசாரணைக்கு அழைக்கின்றனர் கண்காணிக்கின்றனர் அச்சுறுத்துகின்றனர் என தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் அரசாங்கம் விசேட உத்தரவொன்றை பிறப்பிக்காவிட்டால் இது தொடரும் என எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஊடகவியலாளர்குமணனை பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளமை பல வருடங்களாக இடம்பெறும் துன்புறுத்தல்கள் அச்சுறுத்தல்களின் சமீபத்தைய சம்பவமாகும்.

பயங்கரவாத விசாரணை பிரிவினர் குற்றப்புலனாய்வு பிரிவினர்தகவல் வழங்க கோரி அவரை பலமுறை விசாரணைக்காக அழைத்துள்ளனர்இஅவரை அச்சுறுத்தியுள்ளனர்விசாரணைக்காக அழைத்துள்ளனர்அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்  அவரை பின்தொடர்ந்துள்ளனர்.

இவ்வாறான அழைப்பாணைகள் தொலைபேசி அழைப்புகள்இவீடுகளிற்கு செல்லுதல் போன்றவற்றை எதிர்கொண்;டவர் குமணன் மாத்திரமில்லை.பல சிவில் சமூக பிரதிநிதிகள்இசெயற்பாட்டாளர்கள்முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள்காணமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்கள் போன்றவர்களும் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

இன்றும் இது தொடர்வது ஆச்சரியமளிக்கும் விடயம் மாத்திரமில்லை.

ஏனெனில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும் முறைசாரற்ற வழிகளில் வளர்ந்ததை நல்லாட்சி காலத்தில் அகற்றவில்லை.தற்போது அது முன்னர் போலவே செயற்படுகின்றது.

இந்த அரசாங்கம் இவற்றை நிறுத்துமாறு  அவர்களிற்கு விசேட உத்தரவை பிறப்பித்தால் ஒழிய அது தொடரப்போகின்றது.

விசாரணைதுன்புறுத்தலுக்குக் கொடுக்கப்படும் காரணங்கள் மற்றும் கேள்விகளில் மனித உரிமைகள் பிரச்சினைகள் வெளிநாட்டு நிதியைப் பெறுதல் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்துதல் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்துதல் மற்றும் ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்துடனான ஈடுபாடு ஆகியவை அடங்கும்

பாதுகாப்பு நிறுவனங்கள் சட்டபூர்வமான அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட நடவடிக்கைகளை உண்மையில் குற்றமாக்குகின்றன  மேலும் ஒரு சமூகத்தை இன ரீதியாக அடையாளம் காணவும் துன்புறுத்தவும் அரிதான அரசு வளங்களை வீணாக்குகின்றன – தமிழர்கள் இயல்பாகவே சந்தேகத்திற்குரியவர்களாகவும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.