காண்பிய விரிப்புக் கண்ட நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வடக்கு வாசல் வளைவு
vidiyel 7 ஆவணி 2026 · 09:43 13 views
Ad Space
Ad Space
'அலங்காரக் கந்தன்' எனப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்குத் திசையில், கோவில் வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' ஆடிக் கார்த்திகை நன்னாளான இன்று வியாழக்கிழமை (06.08.2026) தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல்-12 மணியளவில் அடியவர்களின் அரோகராக் கோஷங்கள் முழங்கக் காண்பிய விரிப்பு (திறப்பு விழா) கண்டது.
மேற்படி நிகழ்வில் பெருமளவான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.