வெகு சிறப்பாக இடம்பெற்ற யாழ்ப்பாணப் பிரதேச செயலகப் பண்பாட்டுப் பெருவிழா
vidiyel 7 ஆவணி 2026 · 09:05 12 views
Ad Space
Ad Space
வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணப் பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த 2026 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணப் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா புதன்கிழமை (05.08.2026) காலை-09 மணியளவில் யாழ்ப்பாணப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கலாபூஷணம்.எலியாஸ் வரப்பிரகாசத்தின் கலைப் பணிகளை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட அரங்கில் யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் திருமதி. சிவகாமி உமாகாந்தன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கணேசமூர்த்தி பார்த்திபன் சிறப்பு விருந்தினராகவும், யாழ்.மாவட்டச் செயலகச் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.மாலினி கிருஷ்ணானந்தன் மற்றும் மூத்த நாட்டுக் கூத்துக் கலைஞர் கலாபூஷணம்.வஸ்தியாம்பிள்ளை ஜேக்கப் (அல்பிரட்) ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டிருந்தனர்.