காலி - கராப்பிட்டிய பகுதியில் வீட்டின் குளியலறையிலிருந்து அழுகிய நிலையில் ஆண்ஒருவரின் சடலம் மீட்பு
Ad Space
Ad Space
காலி, கராப்பிட்டிய - மாஇட்டிப்பைய பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையிலிருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரல் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 58 வயதுடைய திருமணமாகாத நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக. வீட்டிலிருந்து வீசிய கடுமையான துர்நாற்றம் தொடர்பில் அருகில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கராப்பிட்டிய பொலிஸ்நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதன்படி, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சோதனையிட்டபோதே வீட்டின் குளியலறையிலிருந்து அந்நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைக்காகச் சடலம் காலி தேசிய வைத்தியவசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space