ஹேமாக விற்பனை காணி ஒன்றில் வைத்து கொலை செய்யப்பட்டு, இருகிலிருந்த கால்வாயினுள் சடலமாக மீட்கப்பட்ட வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின், கொலை மசம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் ஒருவரான இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பல பகுதிகளில் பெண்களை ஆயுத முனையில் மிரட்டி தொடர் திருட்டு சம்பவங்களில் மேற்படி சந்தேகநபர் ஈடுபட்டுள்ளதாபகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டநீண்ட விசாரணைக்குப் பின்னரை் ஹோமாகம பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.
பனாகொடை இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான இராணுவ உத்தியோகத்தரான சந்தேகநபர், ஹோமாகம - கலாகாஹேன பகுதியில் வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கூரிய ஆயுத்தால் தாக்கி படுகொலை செய்து, அவரின் மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி மற்றும் பணத்தையும் திருடி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை 16 ஆம் திகதி கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் சடலப் பரிசோதனையில் கொலை உறுதியானது.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகிலிருந்த சிசிரிவி கமரா காட்ச்சிகளகை் கொண்டு வபொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், சந்தேகநபர் தனது தந்தையுடன் இணைந்து இக்கொலையைச் செய்துள்ளார். அத்தோடு திருடப்பட்ட மோட்டார் சைக்கிளைக் கொண்டு மொரகஹஹேன மற்றும் ஹோமாகம பகுதிகளில் பெண்களை மிரட்டித் தங்கச் சங்கிலிகளைக் திருடியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
பிட்டிபன பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து கைக்குண்டு, ஹெரோயின், இரத்தக்கரை படிந்த தலைக்கவசம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதோடு, இக்குற்றச்செல்களுடன் தொடர்புடைய மற்றை முக்கிய சந்தேகநபரான தந்தையைக் கைது செய்வதுக்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஹோமாகம பகுதியில் வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகொலை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space