வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரதான போதைப்பொருள் வியாபாரியான 'குடு அஞ்சு'வின் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த நபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞராவார்.
சந்தேகநபரிடமிருந்து 500 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக 'குடு அஞ்சு' இந்த நபருக்கு ஒரு முறைக்கு 15,000 ரூபாவுக்கும் 20,000 ரூபாவுக்கும் இடைப்பட்ட பணத்தொகை வெளிநாட்டில் உள்ள 'குடு அஞ்சு'வினால் வழங்கப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.