யாழ்ப்பாணம் கைதடியில் இன்று செவ்வாய்க்கிழமை (13.10.2026) நடந்த கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டார்ச் சைக்கிளும், கனரக வாகனமும் மோதியதில் குறித்த விபத்து நடந்துள்ளது.
மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

