உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுத்து உத்தரவொன்றினைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத ரிட் இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்ற இன்று (01) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோரைக் கொண்ட இருவர் அடங்கிய நீதிபதிகள் குழாம், மனு தொடர்பான சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.