கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை
Ad Space
Ad Space
சமூக ஊடகப் பக்கங்களில் அண்மைக்காலமாக வெகுவாக பகிரப்பட்டு வந்த ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்களை அதன் உரிமையாளர் ஒருவர் தாக்கும் காணொளியுடன் தொடர்புடைய, பிரபல கொத்துரொட்டி ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதற்கமைய சந்தேகநபர் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் கீழ் விடுவிக்கப்பட்டார்.
மேற்படி சந்தேகநபர் கொத்துரொட்டி ஹோட்டல் ஒன்றின் உரிமையாளராவதுடன், சமூக ஊடகங்களில் பலரால் அறியப்பட்ட நபருமாவர். அண்மைய சில நாட்களாக குறித்த நபர் தனது உணவகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை கடுமையான வார்த்தைகளால் பேசி, தாக்கிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெகுவாக பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் மருதானை பொலிஸாரால் இன்று (30) செவ்வாய்க்கிழமை மேற்படி சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் நுகேகொடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபருக்கு நீதிவான் பிணைவழங்கி உத்தரவிட்டிருந்தார். அதற்கமைய சந்தேகநபர் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணைகளின் கீழ் விடுவிக்கப்பட்டார்.
Ad Space
Ad Space