கொழும்பு, நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல்லேவெல, ஹுங்கமுவ பகுதியைச் சேர்ந்த பொறியியல் பீடத்தின் மாணவியான சக்குனி துவானி என்ற 23 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த வியாழக்கிழமை முற்பகல் 11.52 மணியளவில் மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவல வீதியில் திறந்த பல்கலைக்கழக பாதசாரி கடவையில் விபத்து இடம்பெற்றுள்ளது.
பாதசாரி கடவையை கடக்க முயன்ற மாணவி மீது கெப் ரக வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவியின் மரண விசாரணை களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ஜானக கொடிகார முன்னிலையில் நடைபெற்றது.
வீதி விபத்தினால் தலைக்கும் மண்டையோட்டிற்கும் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே இந்த மரணம் நிழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பட்டப்படிப்பை முடிப்பதற்கு ஒரு சில நாட்களே இருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் கெப் ரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.