குறித்த நிகழ்வில் அகில இலங்கை இளங்கோ கழக அமைப்பாளரும், வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி ஆசிரியருமான பரா.ரதீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இலக்கியம் காட்டிய மானிட அளவு கோல் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கலாசாலையின் தமிழ்ப் பாடநெறி விரிவுரையாளரும், கவிஞருமான வேல்.நந்தகுமார் அதிதிக்கான அறிமுக உரையை வழங்கினார். அதிதிப் பேச்சாளர் கலாசாலை முகாமைத்துவக் குழுமத்தினரால் கெளரவிக்கப்பட்டார்.
