சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் வாராந்த நிகழ்வாக தெய்வீக இசை அரங்கம் நிகழ்வு இ  வெள்ளிக்கிழமை (17.07.2026) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முதுகலை வாய்ப்பாட்டுப் பட்டதாரியான திருமதி.சுகிர்தினி பிரபு குழுவினரின் தெய்வீக இசை அரங்கம் அரங்கேறியது.