சோமசுந்தர ஞானத் தமிழ்மன்றத்தின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்ட நிகழ்வு ஆடிப்பிறப்புத் திருநாளான வெள்ளிக்கிழமை (17.07.2026) முற்பகல்-10 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்துக்கு முன்பாகவுள்ள தங்கத் தாத்தா நவாலியூர்.சோமசுந்தரப் புலவரின் உருவச் சிலையடியில் சோமசுந்தர ஞானத் தமிழ்மன்றத்தின் தலைவர் கே.எஸ்.சிவஞானராஜா தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டுத் தொடர்ந்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை வழிபாடு நடைபெற்றது. மூத்த எழுத்தாளர் மு.ஈழத்தமிழ்மணி தொடக்க உரை நிகழ்த்தினார். தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இணைந்து ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே! எனும் பாடலைப் பாடினர். சிறப்புரைகளைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும், வீதியால் சென்ற பொதுமக்களுக்கும் ஆடிக்கூழ் பரிமாறப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.