1.48 கோடி ரூபாய் பெறுமதியுடைய 'குஷ்' ரக போதைப்பொருளைச் சொக்லெட் வடிவில் விசித்திரமாக மறைத்துக் கொண்டு வர முயன்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் ஆவார்.
தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இன்று (27) ஞாயிற்றுக்கிழமை காலை 9:25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, சந்தேகநபரின் பயணப் பையை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சோதனையிட்டபோது, 1.480 கிலோகிராம் எடையுள்ள 'குஷ்' போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த போதைப்பொருட்கள் சொசேஜ் வடிவில் மாற்றப்பட்டு, சொக்லெட் பூசப்பட்டு, பொதி செய்யப்பட்டு, பிரபல சொக்லெட் முத்திரை பொறிக்கப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
சொக்லெட் வடிவில் போதைப்பொருள் கடத்தல்: விமான நிலையத்தில் இளைஞன் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space