கிரிஷ் நிறுவனத்துடனான இலஞ்ச கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, அந்நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அன்றைய தினம் விளக்கமறியலில் இருப்பின் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிவான் இதன்போத உத்தரவிட்டார்.
மேற்படி வழக்கு இன்று (20) கொழும்பு நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோர் வழக்கு விசாரணைக்காக சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வழக்கு அழைக்கபப்பட்ட போது நீதிமன்றத்தில் முன்னிலையான இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடயங்களை முன்வைக்கையில், இவ்வழக்கின் 1, 2 மற்றும் 6 ஆவது சந்தேகநபர்களான கிரிஷ் டிரான்ஸ்வர்க்ஸ் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்களான இந்தியப் பிரஜைகள் அமித் கட்டியார், ராஜேந்திர பிரசாத் குப்தா மற்றும் ஆஸ்சர்யா சோனி ஆகியோருக்கு பிடியாணை பிறப்பிப்பதற்காக நீதிமன்றத்தில் சாட்சியங்களை நெறிப்படுத்தவுள்ளதாக அறிவித்தது.
மேலும், இக்கட்டட நிர்மாணப் பணிகளுக்கான அளவீட்டு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அளவைத் திணைக்களத்திடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. அத்துடன், ஜனாதிபதியின் மானியம் வழங்கும் பத்திரமொன்றின் கீழ் இக்காணியை கொழும்பு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கியமை எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கமைய, அப்போதைய முன்னாள் ஜனாதிபதியின் மானியம் வழங்கல் பத்திரத்தின் கீழ் இது வழங்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளை, இவ்வழக்கின் நான்காவது சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவின் கையெழுத்துப் பரிசோதனைக்குத் தேவையான ஆவணத்தை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிவிக்கும் தினத்தில் அவ்வாவணம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், மூன்றாவது சந்தேகநபரின் பிணைக் கோரிக்கை தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதற்கமைய மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிவான், மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராகப் பிடியாணை கோருவதற்கான சாட்சி விசாரணையை எதிர்வரும் தினத்தில் முன்னெடுக்குமாறு உத்தரவிட்டதுடன், அதுவரை மூன்றாவது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார். குறித்த சந்தேகநபரின் பிணை உத்தரவு எதிர்வரும் தினத்தில் அறிவிக்கப்படும் எனவும் நீதிவான் தெரிவித்தார்.
மேலும் கண்டறிக
செய்திகள் வாசி
வலையொலி சந்தா
முதன்மைச் செய்திகள்
இச்சம்பவம் தொடர்புடய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடந்த வழக்கு விசாரணையின் போது பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த 18 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் அப்பிணை உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த இடைக்காலத் தடையுத்தரவு காரணமாகப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் அன்றைய தினம் வரை விளக்கமறியலில் இருப்பின் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிவான் உத்தரவிட்டடார்.
பயண வழிகாட்டி
இச்சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு எதிர்வரும் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.