அஹங்கம, கதளுவ பாலத்திற்கு அருகில் டிப்பர் லொறி ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (27) திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும், மாத்தறையிலிருந்து காலி நோக்கிப் பயணித்த டிப்பர் லொறி ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த நால்வரும் டிப்பர் லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக காராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டிப்பர் லொறி மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோதே எதிரே வந்த பேருந்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.