டீசலுக்குப் பதில் மண்ணெண்ணெய்: கந்தளாயில் டிப்பர் வாகனத்துடன் சாரதி கைது
Ad Space
Ad Space
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் செலுத்தப்பட்டு வந்த டிப்பர் வாகனம் ஒன்று, அதன் சாரதியுடன் கந்தளாய் போக்குவரத்து பொலிஸாரால் நேற்று (05.07.2026) காலை கைது செய்யப்பட்டுள்ளது.
கந்தளாய் - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை 7 மணியளவில் போக்குவரத்து பொலிஸார் வழமையான வாகன சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த டிப்பர் வாகனம் சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த வாகனம் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் மூலம் இயங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் போக்குவரத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுகத் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினரே இந்த அதிரடி சோதனையை முன்னெடுத்து, வாகனத்தையும் அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சாரதி இன்றைய தினம் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் போக்குவரத்து பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space