ஒரு கொடுங்கோலனைப் போல டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி நடத்தி வருவதாக முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்துள்ளமை அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரச்சார கூட்டங்கள் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் விதமாக பல இடங்களில் பிரச்சாரம் செய்து வரும் கமலா ஹாரிஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியை மேற்கண்டவாறு விமர்த்துள்ளார்.
ட்ரம்ப் தலைமையிலான அரசின் கொள்கைகள், பொருளாதார நிலை, சுகாதாரத் திட்டங்கள், வெளிநாட்டுக் கொள்கை ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை இதன்போது கமலா ஹாரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.
பிரச்சார கூட்டத்தில் தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ்,
“மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகத் தோன்றும் சிலர் திறமையற்றவர்கள் என்பது அம்பலமாகியிருக்கிறது. மக்கள் தங்கள் மனதில் உள்ள கோபத்தை வாக்குச்சீட்டின் மூலம் வெளிப்படுத்தவேண்டிய தருணம் வந்துவிட்டது...” என்றும் தெரிவித்துள்ளார்.