தமிழகத்தில் ஏற்கெனவே அதிக டாஸ்மாக் கடைகள் இருப்பதால், புதிதாக மதுபானக் கடைகள் திறக்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி நவக்கிணத்துப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ‘திருச்சி நல்லம்பிள்ளை கிராமம் நவகிநத்துப்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் கடை திறந்தால் கிராமத்தில் பல்வேறு பிரச்சனைகள் வரும், சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். எனவே, டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.