தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 2021 முதல் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கு அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை திறந்து, அவற்றில் காணப்படும் பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒரு முதுமக்கள் தாழியை திறந்தபோது, அதில் 2 மூடிகள் இருந்தன.
அவற்றை திறந்து பார்த்தபோது, 2 மண்டை ஓடுகள், முதுகெலும்பு , கை, கால் எலும்புகள் மற்றும் சிறு சிறு பானைகள், இரும்பால் ஆன உளி ஆகியவை இருந்தன. 2 மண்டை ஓடுகள் கணவன், மனைவிக்கு உரியவையா?, அல்லது தாய் மற்றும் குழந்தைக்கு உரியவையா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.