காசா இனப்படுகொலை: சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்

காசா மீது இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், இஸ்ரேல் அரசுடன், இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

மேலும் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

* காசாவில் நடைபெறும் இனப்படுகொலை மனதை உலுக்கிறது.

* 11 ஆயிரம் பெண்கள், 17 ஆயிரம் குழந்தைகள், 175 பத்திரிகையாளர்கள், 125 ஐ.நா. ஊழியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

* 26 ஆயிரம் குழந்தைகள் பாலஸ்தீனத்தில் பெற்றோரை இழந்திருக்கிறார்கள்.

* உணவுப்பொருள் ஏற்றி வரும் லாரியை எதிர்பார்த்து காத்திருந்தபோது 45 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

* உணவு பொருட்கள், மருந்துகள், பால் பவுடர் எடுத்து சென்ற தன்னார்வலர்களை இஸ்ரேல் கைது செய்தது.

* காசா மீதான தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

* காசாவில் இரக்கமற்ற படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

* காசா மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

* 14-ந்தேதி நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்.

* மனிதாபிமானம் உள்ள யாரும் இதை பிறநாட்டு விவகாரம் என்று பார்க்கக்கூடாது.

* காசாவை மறுகட்டமைப்பு செய்து மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.