மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கர்நாடகத்தில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் போதிய அளவில் இருந்தும் அந்த மாநில அரசு திறந்து விட மறுப்பதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குறுவை பயிர்கள் கருகி வருவதால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்து விட மாவட்டங்களில் (பாதிக்கப்பட்ட பகுதிகளில்) வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.