சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ராஜினாமா

தமிழக சட்டப்பேரவை செயல​ராக இருந்த கி.சீனி​வாசன் திடீரென நேற்று பதவி வில​கினார். தமிழக சட்​டப்​பேரவை செயலர் கி.சீனி​வாசன் கடந்த 2018-ம் ஆண்​டு, பேர​வை​யின் செயல​ராக நியமிக்​கப்​பட்​டார்.

முன்​ன​தாக, பேர​வைத் தலை​வ​ராக இருந்த டி.ஜெயக்​கு​மார் மற்​றும் பி.தன​பால் ஆகியோரின் உதவி​யாள​ராக பணி​யாற்​றி​னார். தனபாலின் உதவி​யாள​ராக இருந்த போது, பேர​வைச் செயல​ராக நியமிக்​கப்​பட்​டார்.

அதி​முக ஆட்சியைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்​டு​கள் திமுக ஆட்​சி​யிலும் சட்​டப்​பேரவை செயல​ராக பணி​யாற்​றி​னார். கடந்த 2023-ம் ஆண்டு நவம்​பர் 30-ம் தேதி, 60 வயது நிறைவடைந்து ஓய்வுபெற்ற நிலை​யில், திமுக அரசு இவருக்கு முதன்மை செயலர் பதவி உயர்வு வழங்​கியதுடன், 3 ஆண்​டு​கள் அதாவது இந்​தாண்டு நவம்​பர் 30-ம் தேதி வரை பணி நீட்​டிப்பு வழங்​கியது.

இந்​நிலை​யில், ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு கடந்த மாதம் முதல்வர் விஜய் தலை​மையி​லான அரசு பதவி​யேற்​றது. அதன் பின்னர் நடைபெற்ற பல்வேறு சட்டப்பேரவை நிகழ்வுகளை திறம்பட நடத்தி முடித்தார்.

விரைவில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலை​யில், நேற்று பகல் திடீரென செயலர் சீனி​வாசன், பணி வில​கல் கடிதத்தை பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகரிடம் அளித்​தார்.

இந்த தகவலால் தலை​மைச் செயல​கத்​தில் பரபரப்பு ஏற்​பட்​டது. இந்​நிலை​யில், அடுத்த கட்​ட​மாக பேர​வைச் செயலரை தேர்வு செய்​வதற்​கான கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

தொடர்ந்​து, சீனி​வாசனுக்கு அடுத்த நிலை​யில் உள்ள சிறப்பு செயலர் சாந்தி விரை​வில் பேர​வைச் செயல​ராக தேர்வு செய்யப்பட வாய்ப்​பு உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​ உள்​ளது.