சிவகாசி சுற்றுவட்டாரத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் 3.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்களி டையே பதற்றம் ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. சில நேரங்களில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்படும்போது, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம்.
ஆனால் நேற்று எந்த பட்டாசு ஆலையிலும் வெடிவிபத்து ஏற்படவில்லை. இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் 3.0 ரிக்டர் அளவில் சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, சாத்தூரில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.
இதனால் வீட்டிலிருந்த பொருட்கள் கீழே விழுந்ததால், பொது மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து, பேரிடர் மேலாண்மை துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.





