சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தங்கள் வழங்குவதில் திமுக அரசு விஞ்ஞானப்பூர்வமாக ஊழல்

சென்னை மாநக​ராட்​சி​யில் கட்​டு​மானப் பணி​களுக்​கான ஒப்​பந்​தங்​கள் வழங்​கு​வ​தில் திமுக அரசு விஞ்​ஞானப்​பூர்​வ​மாக ஊழல்களைச் செய்து வரு​கிறது. என்று பாமக தலை​வர் அன்​புமணி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்சி சார்​பில் வழங்​கப்​படும் கட்​டு​மான பணி​களுக்கு இ-டெண்​டர்​களை தாக்​கல் செய்​யும் ஒப்​பந்​த​தா​ரர்​கள், அத்​துடன் கள ஆய்வு சான்​றிதழை​யும் பதிவேற்​றம் செய்ய வேண்​டும் என்ற புதிய முறையை கடந்த 2 ஆண்​டு​களாக மாநக​ராட்சி அறி​முகம் செய்​துள்​ளது.

மாநக​ராட்சி செயற்​பொறி​யாளர் வழங்​கும் கள ஆய்​வுச் சான்​றிதழ் அனை​வருக்​கும் கிடைத்து விடாது. மாநக​ராட்சி ஒப்​பந்​தத்​தில் யாரெல்​லாம் கலந்​து​கொள்ள வேண்​டும் என்று ஆட்சி தலைமை விரும்​பு​கிறதோ, அவர்​களுக்கு மட்​டும்​தான் இச்​சான்று வழங்​கப்​படும்.

இந்த சான்​றிதழை பதிவேற்​றாத நிறு​வனங்​கள் தொழில்​நுட்ப தகுதி சுற்​றில் வெளி​யேற்​றப்​படும். அதன்​பின் தங்​களுக்கு ஆதர​வான நிறு​வனங்​களுக்கு சென்னை மாநக​ராட்சி ஒப்​பந்​தங்​களை வழங்​கும். இது​தான் திமுக​வின் நவீன விஞ்​ஞான ஊழல் முறை​யாகும்.

ஊழலை ஒழிப்​ப​தற்​காக இ-டெண்​டர் போன்ற வெளிப்​படைத்​தன்மை நடை​முறை​கள் கொண்டு வரப்​பட்​டாலும் அதி​லும் ஊழலுக்​கான வழி​முறை​கள் புகுத்​து​வது​தான் திமுக​வின் வழக்​கம் என்​பது இதன் மூலம் உறு​தி​யாகி​யுள்​ளது.

மணல் கொள்​ளை, கனிமவள கொள்​ளை, பணி நியமன ஊழல் என திமுக ஆட்​சி​யில் ரூ.6 லட்​சம் கோடிக்​கும் கூடு​தலாக ஊழல் நடந்​திருப்​ப​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​துள்​ளன.

ஆட்சி அதி​காரத்​தைப் பயன்​படுத்தி சட்​டத்​தின் பிடியி​லிருந்து வேண்​டு​மா​னால் திமுக​வினர் தப்​பிக்​கலாம். ஆனால் சட்​டப்​பேரவை தேர்​தலில் மக்​கள் அளிக்​கும் தண்​டனையி​லிருந்து தப்ப முடி​யாது. இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.