தமிழகத்திற்கும், தமிழ் இனத்திற்கும் எதிரான கட்சி பாஜக

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களான நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விளவங்கோடு வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

உங்கள் வாக்கு தான் ஜனவாயகத்தை காக்க உள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமளியான இந்தியாவாக மாறிவிடும்.மணிப்பூர் மாநில மக்கள் அகதிகள் போல் உள்ளனர். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வெறுப்பு விதைகளை தூவி விடுவார்கள். புயல், வெள்ள பாதிப்பின்போது வராத பிரதமர், தற்போது வருவது ஏன்? அதற்கான நிவாரண நிதியை கூட மத்திய அரசு வழங்கவில்லை.புயல், வெள்ள பாதிப்பின்போது மக்களோடு மக்களாய் அமைச்சர்கள் இருந்தனர்.

பாஜக ஓரவஞ்சனை அரசாக செயல்பட்டு வருகிறது. பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டது. வெள்ள நிவாரண நிதி குறித்து மத்திய நிதியமைச்சர் விமர்சனம் செய்கிறார்.நீதிமன்றத்தை நாடி வெள்ள நிவாரணத்தை பெறுவோம்.ஆட்சி, பதவி உள்ளது என்பதற்காக எதையும் பேச கூடாது. பாஜகவிற்கு, தமிழர்கள் மீது ஏன் இத்தனை கோபம். ஆட்சி, பதவி உள்ளது என்பதற்காக எதையும் பேச கூடாது.தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பு திட்டம் என்ன ? பட்டியலிட்டு பிரதமர் பேச வேண்டும்.எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. பூதக்கண்ணாடியை வைத்து தேடினாலும், எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை.தமிழக மீனவர்கள் கைதை, மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன ? எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சிப்பதையே, பிரதமர் செய்து வருகிறார். தமிழக மீனவர்கள் குறி்தது பலமுறை பாராளுமன்றத்தில் பேசியுள்ளோம். பாஜகவுக்கு எதிராக ஈபிஎஸ் ஒரு வார்த்தையாவது பேசினாரா?இந்தியா சிறப்பாக இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். பாஜகவுடன், அதிமுக மறைமுக கூட்டணியில் உள்ளது.

திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வாய்ப்பு இந்த தேர்தல். ஒட்டுமொத்த இந்தியாவுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கையை வழங்கி உள்ளோம்.பாஜகவிற்கு அளிக்கும் வாக்கு, தமிழகத்திற்கு வைக்கும் வேட்டு. தமிழகத்திற்கும், தமிழ் இனத்திற்கும் எதிரான கட்சி பாஜக.இவ்வாறு அவர் கூறினார்.