தமிழகத்தில் புதிதாக 26 இடங்களில் ‘தோழி’ விடுதிகள்

தமிழகத்​தில் 26 இடங்​களில் மகளிருக்​கான ‘தோழி’ தங்கும் விடு​தி​கள் அமைக்​கப்​பட்டு வரு​வ​தாக சமூகநலன், மகளிர் உரிமைத் துறை அமைச்​சர் பி.கீ​தாஜீவன் தெரி​வித்​தார்.

தூத்​துக்​குடி​யில் செய்​தி​யாளர்​களி டம் அவர் நேற்று கூறிய​தாவது: புது​மைப் பெண் திட்​டத்​தின் கீழ் இதுவரை கலை – அறி​வியல், பொறி​யியல், தொழிற்​படிப்​பு, மருத்​து​வப் படிப்பு பயிலும் 5,29,728 மாணவி​கள் பயன் பெற்​றுள்​ளனர். தமிழ்ப் புதல்​வன் திட்​டத்​தின்கீழ் 3,92,449 மாணவர்​கள் பயனடைந்​துள்​ளனர்.ஊட்​டச்சத்தை உறுதி செய் திட்​டத்​தின் கீழ் கடுமை​யான ஊட்​டச்​சத்து குறை​பாடுடைய 75 ஆயிரம் குழந்​தைகள் கண்​டறியப்​பட்​டு, குழந்​தைகளின் தாய்​மார்​களுக்கு ரூ.22 கோடி யில் ஊட்​டச்​சத்து பெட்​டகங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

தமிழகத்​தில் மகளிருக்​கான 6 புதிய ‘தோழி’ தங்​கும் விடு​தி​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. தூத்​துக்​குடி, திருநெல்​வேலி உள்​ளிட்ட இடங்​களில் உள்ள 10 தங்கும் விடு​தி​கள் சீரமைக்​கப்​பட்டு செயல்​பட்டு வரு​கின்​றன. இதுத​விர, ஆதி​தி​ரா​விடர் நலத்துறை​யில் இருந்து பெறப்பட்ட 3 மகளிர் தங்​கும் விடு​தி​களும் சீரமைக்​கப்​பட்டு செயல்​படு​கின்​றன. தற்​போது மொத்​தம் 19 விடு​தி​கள் செயல்​பட்டு வரும் நிலை​யில், புதி​தாக 26 ‘தோழி’ தங்​கும் விடு​தி​கள் கட்​டும் பணிகள் பல்​வேறு நிலைகளில் நடந்து வருகின்​றன.

போக்சோ வழக்​கு​களில் பாதிக்​கப்​பட்ட 6,999 பேருக்கு ரூ.103.63 கோடி நிவாரணம் வழங்​கப்​பட்​டுள்​ளது. முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்​தில் இது​வரை 34,987 பள்​ளி​கள் சேர்க்​கப்​பட்டு 20 லட்​சம் குழந்​தைகளும், அன்​புக் கரங்​கள் திட்​டத்​தின் கீழ் 6,910 குழந்​தைகளும் பயன்​பெற்று வரு​கின்​றனர். இவ்​வாறு அவர் கூறி​னார்.