மதுரை மாவட்டத்தில் 7 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டம்

மதுரை மாவட்டத்தில் அதிமுக 7 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 70 தொகுதிகள் வரை வேட்பாளர்களை தலைமை இறுதி செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டத்தில் மதுரை மத்தி, மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு, திருப்பரங்குன்றம், சோழவந்தான், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இதில் கடந்த தேர்தலில் அதிமுக மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி ஆகிய 5 தொகுதிகளில் வென்றது. மீதமுள்ள தொகுதிகளை திமுக கைப்பற்றியது. இந்த முறை தவெக, நாம் தமிழர் கட்சிகள் பிரிக்கும் வாக்குகளால் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.