விஜய் கட்சி பெயருக்கு ஏற்பட்ட சிக்கல்: தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என்கிறார் வேல்முருகன்

சென்னை:விஜய் கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் டி.வி.கே. என வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் கூறுகையில், மிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் டிவிகே என வருகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி 2012-ல் தொடங்கப்பட்டு, கேமரா சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.தமிழக வாழ்வுரிமை கட்சியும் ஆங்கிலத்தில் டிவிகே என வருவதால், டிவிகே என்பதை விஜய்க்கு வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தெரிவித்துள்ளார்.