விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் கலிவரதன் இன்று அதிகாலை கைது செய்து செய்யப்பட்டுள்ளார். நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் கனிமொழி குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருக்கோவிலூர் அருகே மனம்பூண்டி பகுதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கலிவரதன் மீது 3 பிரிவுகள் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.