வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு துணை முதல்வர் அழைப்பு

நம்​முடைய மொழியை​யும், கலாச்​சா​ரத்​தை​யும், பண்​பாட்​டை​யும் மறந்​து​விடக் கூடாது என்று அயல​கத் தமிழர்​களை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கேட்​டுக் கொண்​டார்.

அயல​கத் தமிழர் நலன் மற்​றும் மறு​வாழ்​வுத் துறை சார்​பில் “தமிழால் இணைவோம் – தரணி​யில் உயர்​வோம்” என்ற தலைப்​பில் 2 நாள் நடை​பெறும் அயல​கத் தமிழர் தினம்​-2026 விழா சென்​னை​யில் நேற்று தொடங்​கியது.

இணை​ய​வழி​யில் நடத்​திய பேச்​சு, ஒப்​பு​வித்​தல், மாறு​வேடம், கதை சொல்​லுதல் போட்​டிகளில் வெற்​றி ​பெற்ற 15 பேருக்கு சான்​றிதழ், காசோலைகளை துணை முதல்வர்உதயநிதி வழங்​கி​னார்.

தொடர்ந்​து, விழா மலரை வெளி​யிட அமைச்​சர் துரை​முரு​கன் பெற்​றுக் கொண்​டார். தமிழக அரசின் சார்​பில், ரூ.10 லட்​சம் மதிப்​பிலான இசைக் கருவி​களை மொரீஷியஸ் நாட்​டுக்கு பிர​தி​நிதி மலை​யப்​பனிடம் உதயநிதி வழங்கினார்.

பின்​னர் உதயநிதி பேசி​ய​தாவது: தமிழ் நம் அனை​வரை​யும் இணைக்க கூடிய மொழி. தமிழ் என்​கிற அடை​யாளத்​துக்கு முன்​னால், வேறு எந்த அடை​யாள​மும் நிற்க முடி​யாது. எல்லா பேதங்​களை​யும் தாண்டி நம் அனை​வரை​யும் இணைத்​திருப்​பது நம்​முடைய தாய் மொழித்தமிழ்.

அப்​படி நாம் அனை​வரும் தமிழால் இணைந்​த​தால்​தான், இன்​றைக்கு தரணியை வென்று கொண்​டிருக்​கி​றோம். அயல​கத் தமிழர்​களுக்கு அரசு தந்த அடை​யாள அட்​டை​தான் உங்​களு​டைய தாய்​வீட்டு அடை​யாளம்.