20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாடு

இங்​கிலாந்​து, அமெரிக்​கா, ஆஸ்​திரேலியா உள்பட 20 நாடு​களைச் சேர்ந்த 1000 பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​கும் இந்​திய சர்​வ​தேச கல்வி உச்சி மாநாடு சென்​னை​யில் நேற்று தொடங்​கியது.

தமிழக அரசின் டிட்கோ நிறு​வனம், இங்​கிலாந்து நாட்​டின் தேசிய இந்​திய மாணவர் மற்​றும் பழைய மாணவர் சங்​கம், கிழக்கு இங்​கிலாந்து பல்​கலைக்​கழகம் இணைந்து இந்​திய சர்​வ​தேச கல்வி உச்சி மாநாட்டை சென்​னை​யில் 2 நாட்​கள் நடத்​துகின்​றன.

கலை​வாணர் அரங்​கில் நடை​பெறும் இந்த மாநாட்டை தென்​சென்னை தொகுதி எம்​.பி தமிழச்சி தங்​க​பாண்​டியன் நேற்று தொடங்கிவைத்து பேசி​யதாவது: சமத்​து​வத்​துக்​கும் சமூகநீ​திக்​கும் அடிப்​படை கல்வி.

அதிகார அமைப்பை நோக்கி கேள்வி எழுப்​பும் தைரி​யத்தை தரக்​கூடிய சாதனம் கல்விதான். பழங்​காலம் தொட்டே அறி​வியல் சிந்​தனையை​யும், பகுத்​தறிவை​யும், கேள்வி கேட்​ப​தை​யும் நாம் வலி​யுறுத்தி வரு​கிறோம்.