தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரலும்
vidiyel 18 வைகாசி 2026 · 11:39 8 views
Ad Space
Ad Space
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் அதன் தலைமைச் செயலகத்துக்கு முன்பாக 17ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று (18) காலை அனுஷ்டிக்கப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி விநியோகிக்கப்பட்டது.
இதன்போது, தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவரும் போராளியுமான சி.தேவகுமார் நினைவுச்சுடர் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நூற்றுக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கி அருந்திச் சென்றனர்.
நினைவேந்தல் நிகழ்விடத்துக்குச் சென்ற பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு கஞ்சி அருந்தக் கொடுத்தது மட்டுமன்றி, கஞ்சி பகிர்தலின் நோக்கம் குறித்து விளக்கமளித்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், பொதுச் செயலாளர் ம.கஜேந்திரன் ஆகியோருடன் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.