தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்டை நந்தராம தேரரை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் வெள்ளிக்கிழமை (02.01.2026) மாலை யாழ் தையிட்டியில் திடீரெனச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கடந்த டிசம்பர் மாதம்- 31 ஆம் திகதி தையிட்டி திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டமையால் காணிகளை இழந்தவர்கள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரை யாழ்.மாவட்டச் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியதன் தொடர்ச்சியாக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.