கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டைத் தாக்கிய ‘தித்வா’ புயலால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக, இன்று (27) வெள்ளிக்கிழமை காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமான போது ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி நாட்டின் தெற்கே கடற்பரப்பில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழமுக்கம், பின்னர் ‘தித்வா’ எனும் பாரிய புயலாக வலுப்பெற்று நாடளாவிய ரீதியில் பெரும் அழிவை ஏற்படுத்தியது.

இந்தப் புயலினால் 24 மணித்தியாலங்களுக்குள் 540 மில்லிமீற்றர் வரையிலான மிகக் கடுமம் மழைவீழ்ச்சி பதிவானதுடன், நாட்டின் 25 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பலத்த காற்று, கடும் மழை மற்றும் மண்சரிவுகளினால் வீதி வலையமைப்புகள், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டன.

இந்தப் பேரழிவினால் நாடளாவிய ரீதியில் 650-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 173 பேர் இதுவரை காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.