நுங்​கம்​பாக்​கத்​தில் இந்து சமய அறநிலை​யத் துறையின் கட்​டுப்​பாட்​டில் உள்ள அகத்​தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெரு​மாள் கோயிலுக்​குச் சொந்​த​மான ரூ.15 கோடி மதிப்​பிலான கட்​டிடங்​கள் மற்​றும் நிலங்​களை அறநிலையத்துறை அதி​காரி​கள் மீட்​டுள்​ளனர்.

சென்னை நுங்​கம்​பாக்​கம் வடக்கு மாட வீதி​யில் அகத்​தீஸ்வரர் பிரசன்ன வெங்​கடேச பெரு​மாள் கோயில் அமைந்​துள்​ளது. இக்கோயிலுக்​குச் சொந்​த​மாக நுங்​கம்​பாக்​கம் வள்​ளுவர் கோட்டம் நெடுஞ்​சாலை​யில் 107 சதுர அடி பரப்​பளவி​லான வணிகக் கட்டிடம், வடக்கு மாட வீதி​யில் 2,787 சதுர அடி மற்​றும் 2,953 சதுர அடி பரப்​பளவி​லான 2 குடி​யிருப்​புக் கட்​டிடங்​கள், 1,443 சதுர அடி பரப்​பளவி​லான அடிமனை குடி​யிருப்பு மற்​றும் நுங்கம்பாக்​கம் டேங்க் பண்ட் சாலை​யில் 1,659 சதுர அடி பரப்பளவி​லான அடிமனை குடி​யிருப்பு ஆகியவை உள்​ளன.

இந்​தச் சொத்​துகள் தனிநபர்​களுக்கு மாத வாடகை அடிப்படையில் வழங்​கப்​பட்​டிருந்​தன. ஆனால், வாடகை​ தா​ரர்​கள் பல ஆண்​டுகளாகக் கோயில் நிர்​வாகத்​துக்கு வாடகை செலுத்தாமல் ரூ.86 லட்​சத்து 87 ஆயிரத்து 715 நிலுவை வைத்திருந்தது தெரிய வந்​தது. இத​னால், கோயிலுக்​குச் சொந்தமான சொத்​துகள் ஆக்​கிரமிப்​பில் இருந்​தன. இதையடுத்து, நிலுவை வாடகையை வசூலிப்​ப​துடன், ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் சொத்​துகளை மீட்க இந்து சமய அறநிலை​யத் துறை நட​வடிக்கை மேற்​கொண்​டது.

இதன் தொடர்ச்​சி​யாக, சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​பேரில், கோயில் பரம்​பரை அறங்​காவலர் ராதாகிருஷ்​ணன், செயல் அலு​வலர் ஜெகந்​நாதன் மற்​றும் அறநிலை​யத் துறை அதிகாரி​கள், போலீ​ஸார் இணைந்து சம்​பந்​தப்​பட்ட கட்​டிடங்​கள் மற்​றும் நிலங்​களை மீட்​டனர். இதன் மூலம் கோயிலுக்​குச் சொந்தமான சொத்​துகள் மீண்​டும் கோயில் நிர்​வாகத்​தின் சுவாதீனத்​துக்​குக் கொண்​டுவரப்​பட்​டன. மீட்​கப்​பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.15 கோடி என அறநிலையத்துறை தெரி​வித்துள்ளது.