அண்டை அரபு நாடுகள் மீதான தாக்குதல் தொடரும்: ஈரானின் புதிய உச்சத் தலைவர் மோஜ்தபா காமேனி அறிவிப்பு

அண்டை நாடு​கள் மீதான தாக்​குதல் தொடரும் என்று ஈரானின் உச்​சத் தலை​வ​ராக புதி​தாக பொறுப்​பேற்றுள்ள அயத்​துல்லா மோஜ்தபா காமேனி அறிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்க, இஸ்​ரேல் படைகள் தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. பதி​லுக்கு ஈரானும் வளை​குடா நாடு​களில் அமைந்​துள்ள அமெரிக்க படைத் தளங்​கள் மீது கடும் தாக்​குதலை நடத்தி வரு​கிறது.

இந்​நிலை​யில் அமெரிக்​கா, இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் ஈரான் உச்​சத்​தலை​வ​ரான அயத்​துல்லா அலி காமேனி உயி​ரிழந்​தார். இதையடுத்து ஈரானின் புதிய உச்​சத் தலை​வ​ராக அயத்​துல்லா அலி காமேனி​யின் மகன் மோஜ்தபா காமேனி (56) அண்​மை​யில் தேர்​வா​னார்.

இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் அயத்​துல்லா மோஜ்தபா காமேனி காயம் அடைந்​த​தாகக் கூறப்​பட்​டது. ஈரான்​-அமெரிக்க, இஸ்​ரேல் போரின் வேகம் அதி​கரித்து வரும் நிலை​யில் நேற்று மோஜ்தபா காமேனி ஓர் அறி​விப்பை வெளி​யிட்​டார்.

தொலைக்​காட்​சிகளில்…

உச்ச தலை​வ​ராக பதவி​யேற்ற பின்​னர் அவர் வெளி​யிட்​டுள்ள முதல் அறி​விப்​பாகும் இது. அவரது அறி​விப்பு ஈரானில் உள்ள தொலைக்​காட்​சிகளில் வாசிக்​கப்​பட்​டது. அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: வளை​கு​டா​விலுள்ள அரபு அண்டை நாடு​கள் மீதான தாக்​குதல்​களை ஈரான் நாடு தொடரும். அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலுக்கு எதி​ரான ஒரு தாக்​குதலாக, ஹார்​முஸ் ஜலசந்​தியை தொடர்ந்து மூடிவைப்​போம்.

அமெரிக்க, இஸ்​ரேல் தாக்​குதலில் ஒரே நேரத்​தில் 165 பள்ளி மாணவி​களை இழந்​தோம். இந்த தாக்​குதல் உட்பட எங்​களைத் தாக்​கிய​வர்​களுக்கு நாங்​கள் பதிலடி கொடுப்​போம். எங்​கள் நாட்​டின் மீதான தாக்​குதலுக்கு நாங்​கள் பழி​வாங்​கு​வோம். இவ்​வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். மோஜ்தபா காமேனி.