அமெரிக்காவின் தாக்குதலால் உலக பொருளாதாரத்திற்கு ஆபத்து

ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் மற்றுமொரு சுற்று பொருளாதார ஸ்திரமின்மையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் அமெரிக்கா போன்ற பெரும் பொருளாதார நாடுகளிற்கும் இதுஅச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே மிகவும் நிச்சயமற்ற நிலையில் காணப்பட்ட சர்வதேச பொருளாதார நிலையை வார இறுதி தாக்குதல் மேலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என சர்வதேச நாணயநிதியத்தின் கிறிஸ்டலினா ஜியோஜிவா தெரிவித்துள்ளார்.

எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலால் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் மேலும் உயரும் தாக்கத்தையும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏதேனும் இடையூறு ஏற்படுவதையும் கவனித்து வருவதாக அவர் ப்ளூம்பெர்க் டிவியிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த இரண்டு முக்கிய அபாயங்களுக்கு அப்பால் “இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தாக்கம் இருக்கலாம்”. “பெரிய பொருளாதாரங்களின் வளர்ச்சி வாய்ப்புகளைத் தாக்கும் அதிக கொந்தளிப்பு இருப்பதாக வைத்துக்கொள்வோம் பின்னர் உலகளாவிய வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கீழ்நோக்கி திருத்துவதில் நீங்கள் ஒரு தூண்டுதல் தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள்.”என சர்வதேச நாணயநிதியத்தின் கிறிஸ்டலினா ஜியோஜிவா தெரிவித்துள்ளார்.

சாத்தியக்கூறுகளைப் பார்க்கும்போது இந்த ஆண்டு அமெரிக்கா மந்தநிலையைத் தவிர்க்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் தயவுசெய்து நிலைமையை மோசமானதாக்கவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

“நிச்சயமற்ற தன்மை அதிகமாக இருந்தால் நிலையற்ற தன்மை அதிகமாக இருந்தால் அது வணிகத்திற்கு மோசமாக இருக்கும். நிச்சயமற்ற தன்மை இருக்கும்போது என்ன நடக்கும்? முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில்லை நுகர்வோர் நுகர்வதில்லை அது வளர்ச்சி வாய்ப்புகளைக் குறைக்கிறது ” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.