அமெரிக்காவில் சிறியரக விமான விபத்தில் 3 பேர் பலி

மிச்சிகன்:அமெரிக்கா மிச்சிகனில் உள்ள பாத் டவுன்ஷிப் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பயணிகள் உயிர் இழந்தனர்.விமானம் நடுவானில் பறந்த போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்