அமெரிக்காவில் படிக்கும் அளவுக்கு அபிஜித் திப்கே குடும்ப வருமானம் எவ்வளவு?

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி​​யின் (சிஜேபி) தலை​வர் அபிஜித் திப்கேவின் குடும்ப வரு​மானம் எவ்​வளவு என்​பது குறித்து உயர்​நிலை விசா​ரணை நடத்​தக் கோரி மகா​ராஷ்டிர அரசிடம் ஆர்​டிஐ ஆர்​வலர் அமித் திவாரி மனு அளித்​துள்​ளார்.

மகா​ராஷ்டி​ரா​வின் சம்​பாஜிநகரை சேர்ந்​தவர் அபிஜித் திப்கே (30). புனே​வில் இதழியல் பட்​டம் பெற்ற அவர் கடந்த 2020 முதல் 2023 வரை ஆம் ஆத்மி கட்​சி​யின் சமூக ஊடகப் பிரி​வில் பணியாற்​றி​னார்.

பின்​னர் கடந்த 2023-ம் ஆண்​டில் அமெரிக்காவின் பாஸ்​டன் பல்​கலைக்​கழகத்​தில் பட்ட மேற்படிப்பில் சேர்ந்​தார். கடந்த 2025-ம் ஆண்​டில் பட்ட மேற்படிப்பை நிறைவு செய்த அவர், அமெரிக்​கா​வில் பணிவாய்ப்பு​களை தேடிவந்​தார்.

கடந்த மே 16-ம் தேதி சமூக வலை​தளத்​தில் கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற அமைப்பை அவர் தொடங்​கி​னார். இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 6-ம் தேதி அவர் இந்​தியா திரும்​பி​னார். நீட் வினாத்​தாள் கசிவை கண்​டித்து அபிஜித் திப்கே தலை​மையி​லான சிஜேபி நடத்​திய போராட்​டத்​தால் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கி​னார்.

இந்த சூழலில் குஜ​ராத்​தின் சூரத் நகரை சேர்ந்த ஆர்​டிஐ சமூக ஆர்​வலர் அமித் திவாரி மகா​ராஷ்டிர அரசு, தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் மற்​றும் மத்​திய மறை​முக வரி வாரி​யம் ஆகிய​வற்​றில் அபிஜித் திப்கே தொடர்​பாக புகார் மனுக்​களை அளித்​துள்​ளார்.

குறிப்​பாக மகா​ராஷ்டிர அரசிடம் அவர் அளித்த மனு​வில், “சிஜேபி தலை​வர் திப்​கே​வின் குடும்ப வரு​மானம் குறித்து உயர்​நிலை விசா​ரணை நடத்த வேண்​டும்” என்று அவர் கோரிக்கை விடுத்​துள்​ளார்.

இதுதொடர்​பாக ஆர்​டிஐ சமூக ஆர்​வலர் அமித் திவாரி கூறியதாவது: அபிஜித் திப்​கே​வின் தந்தை மகா​ராஷ்டிர அரசின் தொழில் மேம்​பாட்​டுக் கழகத்​தில் இளநிலை பொறி​யாள​ராகப் பணி​யாற்றி வரு​கிறார். அவரது மாத வரு​மானம் ரூ.60,000 முதல் ரூ.65,000 ஆக இருக்​கலாம். இந்த வரு​மானத்​தில் அபிஜித் திப்கே அமெரிக்கா​வில் உயர் கல்வி பயின்​றது எப்​படி என்ற கேள்வி எழுகிறது. எனவே திப்​கே​வின் குடும்ப வரு​மானம் குறித்து மகாராஷ்டிர அரசு உயர்​நிலை விசா​ரணை நடத்த வேண்​டும். கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி என்​பது சமூக வலை​தளத்​தில் தொடங்​கப்​பட்ட ஓர் அமைப்​பு.

இந்த அமைப்பு இப்​போது அரசியல் கட்சி போன்று செயல்படுகிறது. பல்​வேறு தரப்​பில் இருந்து நன்​கொடைகளை வசூலித்து வரு​கிறது. இதுதொடர்​பாக விசா​ரணை நடத்​த தலைமைத் தேர்​தல் ஆணை​யத்​திடம் மனு அளித்து உள்​ளேன். மாநிலங்​களவை எம்​பி​யும் மூத்த வழக்​கறிஞரு​மான கபில் சிபல் அண்​மை​யில் கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி​யின் சட்ட பாது​காப்பு நிதிக்கு ரூ.1 கோடியை நன்​கொடை​யாக அளித்​துள்​ளார். இந்த நிதிக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி பிடித்​தம் செய்​யப்​பட்​டதா என்​பது குறித்து வி​சா​ரணை நடத்​தக் கோரி மத்​திய மறை​முக வரி​கள் வாரி​யத்​திடம் மனு அளித்​துள்​ளேன். இவ்​வாறு ​ அமித்​ தி​வாரி தெரிவித்​துள்​ளார்​.