அலி காமேனியின் உடல் மஷாத்தில் நல்லடக்கம் செய்யப்படும்!

ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உடல் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் நடைபெறும் என அடக்கம் செய்யப்படவுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (28) தெஹ்ரான் நகரில் அமெரிக்கவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் காமேனி கொல்லப்பட்டதையடுத்து, பல நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1939 ஏப்ரல் 19ஆம் திகதி பிறந்த காமேனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவும் அஞ்சலி செலுத்தவும் ஈரான் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மஷாத் நகருக்குச் செல்கின்றனர்.

ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதுர்கள் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

மேலும், தெஹ்ரானில் காமேனிக்கு ஒரு பிரியாவிடை நிகழ்வும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், காமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் திகதி இதுவரை வெளியிடப்படவில்லை.