அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்னில் கரையோர தீவொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் தந்தையும் ஐந்து மகன்களும் உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடு தீப்பிடித்து எரிந்ததில் 31 வயது தந்தையும் மூன்று முதல் 11 வயதுடைய ஐந்து புதல்வர்களும் உயிரிழந்துள்ளனர்.
ரசல்தீவில் உள்ள டொட்மன் வீதி வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது வீட்டில் இருந்த தந்தையும் மகன்களையும் இதுவரை காணமுடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாயார் அங்கிருந்துதப்பியுள்ளார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த பெண் தனது முழுகுடும்பத்தையும் இழந்துவிட்டார் என காவல்துறை அதிகாரியொருவர்தெரிவித்துள்ளார்.