இந்திய தொழிலதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் (68) சொத்து மதிப்பு நடப்பு ஆண்டில் 99.7 பில்லியன் டொலராகும். இந்த சொத்து மதிப்பின் அடிப்படையில், அவர் போர்ப்ஸ் வெளியிட்டுள்ள ஆசிய பில்லியனர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறார்.
இந்த சொத்து மதிப்பானது, 100 பில்லியன் டொலருக்கு சற்றே குறைவாக உள்ளது. அதன் அடிப்படையில், 100 பில்லியன் சொத்து மதிப்புள்ள பணக்காரர் என்ற நிலையை அவர் அண்மித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஃபோர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள உலகளாவிய செல்வந்தர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி 21வது இடத்தில் உள்ளார்.
அதேவேளை, அதானி குழுமத் தலைவரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 63.8 பில்லியன் டொலர் என கணிக்கப்பட்டுள்ளது.




