ஆறு பேருடன் பயணித்த உலங்கு வானூர்தி மாயம்

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற உலங்கு வானூர்தி ஒன்று காணாமல் போயுள்ளது.

விமானம் காத்மாண்டுவில் இருந்து சொலுகும்பு நோக்கி பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.

அந்நாட்டின் நேரப்படி காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

உலங்கு வானூர்தியில் பயணித்தவர்களில் 05 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் மற்றைய நபர் விமானி எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.