இந்தோனேசியாவில் இம்மாதம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், சுமார் 1,500 பேரை கடத்தும் செயலில்ஈடுபட்ட சுமார் 500 ஆட்கடத்தல் சந்தேக நபர்களை இந்தோனேசிய காவல்துறை கைது செய்துள்ளது.
தென்கிழக்காசியாவிலேயே அதிக அளவிலான புலம்பெயர் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும்முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா இருந்து வருகிறது. இதில் ஏழ்மையான பல தொழிலாளர்களைசட்டவிரோத பாதைகள் வழியாக வேறுநாடுகளுக்கு கடத்தும் செயல்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், இந்தோனேசியாவிலிருந்து கடத்தப்பட இருந்த 1,553 பேரை மீட்டுள்ளோம் எனகாவல்துறையின் பேச்சாளர் அகமகு ரமதான் கூறியிருக்கிறார்.
“இந்த குறுகிய காலத்தில் பலரை நாங்கள் மீட்டுள்ளோம். ஆனால் ஏற்கனவே பல தொழிலாளர்களைநாட்டைவிட்டு வெளியேறி இருக்கின்றனர்,” என அவர் கூறியிருக்கிறார்.