இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேச மாநிலத்​தில் நேற்று காலை 6:30 மணியள​வில் பைராகரில் இருந்து சாம்பா நோக்கி 18 பயணிகளுடன் புறப்​பட்ட தனி​யார் பேருந்​து, 3 கிலோமீட்​டர் தொலை​வில் உள்ள சலுஞ்ச் மோட் பகுதி அருகே கட்​டுப்​பாட்டை இழந்து அரு​கில் இருந்த பள்​ளத்​தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்​தின் இடி​பாடு​களுக்​குள் பயணி​கள் சிக்​கிக்​கொண்டு அலறினர். அந்​தச் சத்​தத்​தைக் கேட்டு உள்​ளூர் பொது​மக்​கள் ஓடிவந்​தனர். அவர்​கள் உடனடி​யாகக் காவல் துறைக்​குத் தகவல் தெரி​வித்​து, மீட்​புப் பணி​யிலும் ஈடு​பட்​டனர். தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்​புப் படை, காவல் துறை, ஊர்க்​காவல் படை, தீயணைப்​புத் துறை மற்​றும் வரு​வாய்த் துறை​யினர் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்​தனர். அவர்​கள் மீட்பு நடவடிக்​கைகளைத் தீவிரப்​படுத்​தினர்.

இந்த விபத்​தில் 8 பேர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். இத்​தகவலைச் சாம்பா மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை உறுதி செய்​துள்​ளது. படு​காயமடைந்த 6 பேர் உட்பட மொத்​தம் 10 பயணி​கள் காயமடைந்​தனர். அவர்​கள் அனை​வரும் சிகிச்​சைக்​காகச் சாம்பா பண்​டிட் ஜவஹர்​லால் நேரு அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

இந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு மாநில முதல்​வர் சுக்​விந்​தர் சிங் சுகு ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​துள்​ளார். மேலும், காயமடைந்​தவர்​களுக்​குத் தேவை​யான அனைத்து மருத்​துவ உதவி​களை​யும் உடனடி​யாக வழங்​கு​மாறு அவர் மாவட்ட நிர்​வாகத்​துக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

மாநிலத்​தில் பெய்து வரும் தொடர் கனமழை காரண​மாக 185 சாலைகள் துண்​டிக்​கப்​பட்​டுள்​ளன. இதில் மண்​டி​யில் 92, குலு​வில் 48, சாம்பா மற்​றும் சிம்​லா​வில் தலா 14 சாலைகள் அடங்​கும். மேலும், 77 குடிநீர் திட்​டங்​களும், 104 மின் மாற்​றிகளும் முடங்​கி​யுள்​ளன. இத்​தகவலை மாநில அவசரக்​கால செயல்​பாட்டு மையம் தெரி​வித்​துள்​ளது.

ஜூன் 30-ல் பரு​வ​மழை தொடங்​கியது முதல் நிலச்​சரிவு மற்​றும் வெள்​ளப்​பெருக்​கால் 65 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும், ரூ.834 கோடி மதிப்​பிலான சேத​மும் ஏற்​பட்​டுள்​ளது. ஆகஸ்ட் 14 வரை மழை நீடிக்​கும் என்​ப​தால், வரும் திங்​கள் மற்​றும் செவ்​வாய்க்​கிழமை​களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்​யக்​கூடும் என சிம்லா வானிலை மையம் ‘ஆரஞ்​சு எச்​சரிக்​கை’ விடுத்​துள்​ளது.