இலங்கையர்கள் தொழில் புரியும் தென்கொரிய தொழிற்சாலையில் தீ விபத்து

தென்கொரியாவின் நாசு பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக   வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 45 ஊழியர்கள் பாதுகாப்பாக  மீட்கப்பட்டதாகவும் தீ விபத்தினால்  540 மில்லியன்  ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் மின் கசிவு என விசாரணைக் குழு தெரிவித்ததுடன், தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தொழிற்சாலையில் சுமார் 200 பேர் பணிபுரிவதாகவும் பல இலங்கையர்களும் அங்கு கடமையாற்றுவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அங்கு பணிபுரியும் இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.