ஈரானில் உள்ள மசகு எண்ணெயைக் கைப்பற்ற முடியும் எனவும், அந்நாட்டின் முக்கிய எரிபொருள் மையமான கார்க் தீவைக் கைப்பற்றவும் வாய்ப்புள்ளது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையைச் சொல்லப்போனால், ஈரானின் எண்ணெயை எடுத்துக்கொள்வதுதான் எனக்குப் பிடித்தமான விடயம். தனது இந்தத் திட்டத்தை எதிர்க்கும் அமெரிக்கர்கள் அறிவற்றவர்கள்.
ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கார்க் தீவைக் கைப்பற்றுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும், சில நேரங்களில் நாம் கார்க் தீவைக் கைப்பற்றலாம், சில நேரங்களில் இல்லாமலும் போகலாம்; நம்மிடம் பல தெரிவுகள் உள்ளன.
அத்தீவில் ஈரானிடம் பெரிய அளவில் பாதுகாப்பு வசதிகள் இல்லை, அமெரிக்காவால் மிக எளிதாக அதைக் கைப்பற்ற முடியும்.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே 3,500 அமெரிக்க வீரர்கள் அங்கு தரையிறங்கியுள்ளனர். கார்க் தீவைக் கைப்பற்றினால், அமெரிக்கப் படைகள் அங்கு நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டியிருக்கும்.
அதேவேளை, பாகிஸ்தான் தூதுவர்கள் வழியாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றார்.
ஒரு ஒப்பந்தம் மிக விரைவாக எட்டப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட அவர், போர் நிறுத்தம் எப்போது ஏற்படும் என்பது குறித்து தெளிவான பதிலை அளிக்க மறுத்துவிட்டார்.





