ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்!

ஈரான் மீது வான்வழியாக தாக்குதல் நடத்திவந்த நிலையில், தரை வழித் தாக்குதல் நடத்தவும் சாத்தியமுண்டு என அமெரிக்கா மறைமுகமாக தெரிவித்துள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக “ட்ரம்புக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது” என ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ளது.

தஸ்னிம் செய்தி நிறுவனம் இன்று சனிக்கிழமை (21) ஈரான் வழங்கிய செய்தியினை வெளியிட்டுள்ளது.

ஈரான் மண்ணில் தரைவழித் தாக்குதல் நடத்துவதென்பது எமது சிவப்பு கோட்டினை மீறுவதாக அமையும். அவ்வாறு மீறித் தாக்குதல் நடத்தினால், ஒவ்வொரு தாக்குதலுக்கும் நாங்கள் ஆச்சரியமான பதிலடி கொடுப்பது போல, இந்த விஷயத்திலும் அதேபோன்ற ஆச்சரியங்களை மீண்டும் காட்டுவோம்” என ஈரான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

எங்களுடைய எரிசக்தி உட்கட்டமைப்பை தாக்கினால், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து எரிசக்தி உட்கட்டமைப்புகளும் செயலிழந்து போகும். இந்த முறை நாங்கள் தயாராக உள்ளோம். பயங்கரவாதி ட்ரம்ப், இந்த விஷயத்தில் ஏதேனும் தவறு செய்தால், அவருக்கு ஆச்சரியம் ஒன்றை நாங்கள் காட்டுவோம் என்றும் ஈரான் இராணுவம் அதன் அறிக்கையின் ஊடாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எச்சரித்துள்ளது.