உக்ரைன் உளவுப்பிரிவு தலைவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல்

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1¾ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைனின் உளவுப்பிரிவு தலைவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனின் உளவுப் பிரிவு தலைவர் கைரிலோ புடானோ மனைவி மரியானா. இந்த நிலையில் மரியானாவுக்கு கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது உடலில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது. அவருக்கு உணவு மூலம் விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மரியானாவுக்கு விஷம் கொடுக்கப்பட்ட பின்னணியில் யார் இருக்கிறார்கள்? எப்போது விஷம் கொடுக்கப்பட்டது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் உளவுப் பிரிவு தலைவர் கைரிலோ புடானோ முக்கிய நபராக உள்ளார். ரஷியாவை தாக்கும் முயற்சிகளுக்கு மூளையாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது